Latestவிளையாட்டு
23 வயதுக்கு உட்பட ஆசிய கிண்ண தகுதிச் சுற்று ஆட்டம் தாய்லாந்திடம் மலேசியா தோல்வி

பேங்காக், செப் 13 – பேங்காக்கில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிச் சுற்று போட்டியில் நேற்று நடைபெற் H பிரிவுக்கான ஆட்டத்தில் தாய்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் தாய்லாந்து குழுவின் வெற்றி கோலை யோட்சகோன் புராபா வெற்றி கோலை அடித்தார். இந்த தோல்வியினால் H பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்ற மலேசியா இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறுவதாக இருந்தால் தகுதிச் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடியும்வரை காத்திருக்க வேண்டும். தகுதிச் சுற்று போட்டியில் நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் எட்டு குழுக்கள் மட்டுமே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தோஹாவில் நடைபெறும் இறுதிச் சுற்று போட்டிக்கு இயல்பாகவே தகுதி பெற முடியும்.