24 நாட்களுக்குப் பிறகு முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட தென் கலிஃபோர்னியா காட்டுத் தீ

கலிஃபோர்னியா, பிப்ரவரி-2 – அமெரிக்காவின் தென் கலிஃபோர்னியாவில் மூன்றரை வாரங்களுக்கு முன் காற்றினால் மோசமான காட்டுத் தீ, ஒருவழியாக முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெரும் போராட்டத்துக்குப் பிறகு சரியாக 24 நாட்களில் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
ஜனவரி 7-ஆம் தேதி காலை Palisades-சில் சாதாரணத் தீயாக தொடங்கி, கலிஃபோர்னியாவின் வறண்ட வானிலையால் காட்டுத் தீயாக அது மாறியது.
அதே நாள் மாலை லாஸ் ஏஞ்சலஸ் தேசியக் காடுகளின் மலையடிவாரத்தில் Eaton தீ தொடங்கியது.
ஏழு மாதங்களாக மழையில்லாத நிலத்தில், புயல் காற்றும் சேர்ந்துகொள்ள, தீ பெரிதாகி பக்கத்து நகரான Altadena வரை பரவி விட்டது.
Palisades மற்றும் Eaton ஆகிய இந்த 2 தீ சம்பவங்களிலும் மொத்தமாக 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் ஆயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் தீயில் முற்றாக அழிந்துபோயின.
வரலாறு காணாத அளவுக்கு நகரங்கள் பற்றி எரிந்ததால், கலிஃபோர்னியாவும் லாஸ் ஏஞ்சலஸும் உலகம் முழுவதும் பேச்சுப் பொருளாகின.
தீ ஏற்பட்டதற்கான உண்மைக் காரணம் இன்னமும் விசாரணையில் உள்ளது.