Latestமலேசியா

24 மணி நேரத்தில் 3,733 பேருக்கு கோவிட்-19 தொற்று: 26 பேர் மரணம்

கோலாலம்பூர், மே 9 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3, 733 கோவிட் -19 தொற்று சம்பவங்கள் பாதிவாகின.

அந்த எண்ணிக்கையில், சிலாங்கூரில் மிக அதிகமாக 1, 278  பேருக்கும், சரவாக்கில் 454 பேருக்கும், ஜோகூரில்  365 பேருக்கும் கோவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, கோலாலம்பூரில் 338 தொற்று சம்பவங்களும்,  பினாங்கில் 280 சம்பவங்களும், கிளந்தானில் 254 தொற்று சம்பவங்களும்,  நெகிரி செம்பிலானின் 205 சம்பவங்களும் பதிவாகின.

இவ்வேளையில், நாட்டில் கோவிட் தொற்றால் மேலும் 26 பேர் உயிரிழந்திருப்பதாக,  சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா  தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!