
தாய்லாந்து, பேங்கோக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சுற்றுப் பயணிகளை சவாரி ஏற்றிச் சென்ற பை லின் எனும் யானை, எலும்பு வளைவுக்கு இலக்காகி முடமாக காட்சியளிக்கிறது.
ஒரே சமயத்தில் ஆறு பேர் வரை சுமந்து சென்றதால் நாளடைவில் அந்த யானை முடமாகி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், தற்சமயம் வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் அந்த யானை சுதந்திரமாக சுற்றி திரிவதோடு, இயற்கைக்கு மத்தியில் பொழுதை கழித்து வருகிறது.
தாய்லாந்தில், மூவாயிரத்துக்கும் அதிகமான யானைகள், அதிக பளுவை சுமக்க நேரிடும் சுற்றுலாத் துறையிலும், வெட்டுமரத் துறையிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.