
கோலாலம்பூர், ஜன 28 – 250 ரிங்கிட் கடனைத் திரும்ப கேட்ட போது மூண்ட சண்டையால், 76 வயது முதியவர்
ஒருவர் உயிரிழந்தார்.
கோலாலம்பூர், Prima Kepong – கில் கடை ஒன்றின் முன் நிகழ்ந்த அந்த சம்பத்தில் உயிரிழந்த அந்த முதியவரை , அவரது பழைய நண்பர் , பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து தாக்கியிருக்கின்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் , சண்டையை களையச் செய்ததை அடுத்து , அங்கிருந்து 100 மீட்டர் வரை நடந்து சென்ற அந்த முதியவர் பின்னர் கீழே சரிந்து உயிரிழந்ததாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்தார். அச்சம்பவத்தை தொடர்ந்து, அந்த முதியவரை தாக்கிய 63 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.