
புதுடில்லி, ஜூன் 9 – 27 ஆண்டுக்குப் பிறகு அனைத்துலக Miss World அழகிப் போட்டி இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. 71ஆவது முறையாக நடைபெறும் உலக அழகிப்போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதற்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. 130 க்கும் நாடுகளைச் சேர்ந்த அழகிகள் அந்த போட்டியில் பங்கேற்கவிருப்பதாக மிஸ் வேல்ட் கஉலக அழகிப் போட்டியின் தலைவரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான Julia Morlev செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இந்த போட்டியை பிரபலப்படுத்தும் பிரச்சாரங்களில் பங்கேற்பதற்காக நடப்பு உலக அகியான Poland ந்தின் Karolina Bielawska தற்போது இந்தியாவில் இருந்துவருகிறார்.
ஆகக் கடைசியாக 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியை இந்தியா ஏற்று நடத்தியது. இதற்கு முன் ஆறு முறை உலக அழகி பட்டத்தை இந்தியா வென்றுள்ளது. 1996 ஆம் ஆண்டில் Reita Faria , 1994ஆம் ஆண்டில் Aishwarya Rai , 1997ஆம் ஆண்டில் Diana Hayden,1999ஆம் ஆண்டில் Yukta Mookhey , 2,000 ஆம் ஆண்டில் Priyanka Chopra (2000),மற்றும் 2017ஆம் ஆண்டில் Manushi Chillar ஆகியோர் உலக அழகி பட்டங்களை வென்றுள்ளனர்