கோலாலம்பூர், பிப் 27 – நாட்டில் நேற்று புதிதாக 27, 299 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அந்த எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட 1, 624 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே கோவிட் தொற்றினால் மேலும் 43 பேர் மரணமடைந்துள்ளனர்.
இவ்வேளையில் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கோவிட் தொற்று நோயாளிகளுக்கான கட்டில்களின் பயன்பாடு 50 விழுக்காட்டினைத் தாண்டியிருப்பதாக , சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். ICU கட்டில்களின் பயன்பாடு 32 விழுக்காடாக இருப்பதாக அவர் கூறினார்.