
கோலாலம்பூர், மார்ச் 21 – சுகாதார அமைச்சு மற்றும் கோவிட் தடுப்பூசி மருந்து கிடங்கு வசதிகளில் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்த குறைந்தது 28 லட்சம் தடுப்பூசிகளுக்கான மருந்துகள் பிப்ரவரி 28-ஆம் தேதியோடு காலாவதியாகிவிட்டதாக சுகாதார அமைச்சர் டாக்டர் Zaliha Mustafa நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பெறப்பட்ட மொத்த தடுப்பூசி மருந்துகளில் 3.27 விழுக்காடு காலாவதியாகிவிட்டதாக தைப்பிங் பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர் Wong Kah Woh எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் Zaliha இத்தகவலை வெளியிட்டார்.
அதே வேளையில் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் அம்பலப்படுத்தப்படாத ரகசிய தகவல் உடன்பாட்டிற்கு ஏற்ப குறிப்பிடத்தக்க விவரங்களை அரசாங்கம் வெளியிடமுடியாது என்றும் அவர் கூறினார். தடுப்பூசி மருந்துகளின் விலைகளும் இவற்றில் அடங்கும் என Zaliha விவரித்தார்.