கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – மக்களுக்கான அரசாங்கத்தின் மூன்றாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித் தொகை வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் திகதி, வியாழக்கிழமை தொடங்கி வழங்கப்படவுள்ளது.
உதவித் தொகையைப் பெறத் தவறி மறுவிண்ணப்பம் செய்தவர்களுக்கும் புதியதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கும் மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித் தொகை, அடுத்த மாதம் செப்டம்பர் 18-ஆம் திகதி முதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு பெறுநர்களின் எண்ணிக்கை 8.5 மில்லியனாக உயர்ந்திருப்பதன் வழி, 60 சதவீதம் பெரியவர்களுக்கு, இது பயனளிக்கு வகையில் அமைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உதவித் தொகையானது பெறுநர்களின் வங்கியில் செலுத்தப்படும்.
மேலும், பொதுமக்கள் இந்த உதவித் தொகையை பேங்க் சிம்ப்பானான் நசியனால் (BSN) வங்கியின் மூலமும் கட்டம் கட்டமாக ரொக்க தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நிதி அமைச்சு கூறியுள்ளது.