குவந்தான், மார்ச் 4 – அடுக்கு மாடி வீட்டில் மூன்றாவது மாடியிலுள்ள தனது இல்லத்தில் ஜன்னல் கண்ணாடி வழியாக வெளியேறியதால் என்ன செய்வது என்று தெரியாமல் சிக்கித் தவித்த 10 வயது சிறுமி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்களால் மீட்கப்பட்டார்.
குவந்தான் Taman Pelindung Damai யில் இந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. தகவல் கிடைக்கப்பெற்றவுடன் உடடியாக குவந்தான் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 8 தீயணைப்பு வீரர்கள் அந்த அடுக்கு மாடி கட்டிடத்திற்கு சென்றனர். ஏணியை பயன்படுத்தி மூன்றாவது மாடிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் அச்சிறுமியை கீழே இறக்கினர்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. எனினும் அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடி வழியாக வெளியேறிய அந்த சிறுமி வெளியேறியதாக நம்பப்படுகிறது. தக்க நேரத்தில் பொதுமக்கள் கொடுத்த தகவலால் எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் அச்சிறுமி காப்பாற்றப்பட்டதாக குவந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் அதிகாரி Kamarul Bieza Mohamad Kassim தெரிவித்தார்.