
கோலாலம்பூர், ஆக 29 – மலேசியாவின் மக்கள் தொகை 33.4 மில்லியன் பேராக உள்ளது. ஆனால் கடந்த ஜூன் மாதம்வரை 126 மில்லியன் பேருக்கு விநியோகிக்கக்கூடிய 5.5 பில்லியன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Zazuli Johan தெரிவித்தார். சுங்கத் துறையின் விவேகமான நடவடிக்கையின் பயனாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 25,302 கிலோ போதைப் பொருள்பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதுதவிர நாட்டின் கடல் மற்றும் தரைப் பகுதியிலும் போதைப் பொருளை துடைத்தொழிப்பதற்காக பல்வேறு ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பொதுமக்கள் மூலம் பெறப்படும் தகவலினால் அவ்வப்போது பெரிய அளவில் போதைப் பொருள் முறியடிக்கப்பட்டு வருவதையும் Zazuli Johan சுட்டிக்காட்டினார். இவ்வாண்டு மட்டும் கடந்த ஜூன் மாதம்வரை 160 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாகவும் ZaZuli கூறினார். சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரில் கலந்தும், மாத்திரை வடிவிலும் மற்றும் காப்பிக் கொட்டைகள் மற்றும் டயர்களிலும் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் பல்வேறு நடவடிக்கையில் பலர் ஈடுபட்டு வருவதையும் அவர் தெரிவித்தார்.