
கோலாலம்பூர், மார்ச் 17 – கடந்த 13 ஆண்டுகளாக தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கிவரும் , முடிதிருத்தும் துறை , பொற்கொல்லர், ஜவுளி ஆகிய 3 துறைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்க சிறப்பு அனுமதியை வழங்குமாறு , MIET – எனப்படும் மலேசிய இந்தியர் பொருளாதார உருமாற்ற அமைப்பு, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை கேட்டுக் கொண்டிருக்கிறது.
அத்துறைகளில் , வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிக்கும் நடைமுறை 2009 –முதல் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தற்காலிக வேலை பயண பாஸ்- சை புதுப்பிப்பதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த 3 துறைகளைச் சேர்ந்த 10,000 வர்த்தகங்கள் மூடும் அபாயத்தில் இருப்பதாக, அவ்வமைப்பின் துணைத் தலைவர் எம். வெற்றிவேலன் தெரிவித்தார்.
இந்த 3 துறைகளில் வேலை செய்ய வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்க இயலாத சூழலில் , இந்தியர் பாரம்பரிய துறைகள் மெல்ல சாகுமென அவர் குறிப்பிட்ட்டார்.
அந்த மூன்று தொழில்துறைகளும், மலேசிய இந்திய சமூகத்துக்கு முக்கிய பங்களிப்பை செய்வதை அடுத்து, பிரதமர் இவ்விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்வார் என அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.