
பத்து பஹாட். மார்ச் 28 – பத்து பஹாட்டிற்கு அருகே Parit Sulongகில் புரோட்டோன் வீரா காரை துரத்திச் சென்ற Mazda CX 5 கார் கட்டுப்பாட்டை இழந்து புரோட்டோன் வீரா காரை மோதியது. தமக்கு சொந்தமான கைதொலைபேசியை புரோட்டோன் வீராவின் ஓட்டுனர் கொள்ளையடித்துச் சென்றதால் அக்காரை தொழிற்சாலை உரிமையாளரான Mazda CX 5 கார் ஓட்டுனர் ஆத்திரத்தோடு துரத்திச் சென்றபோது இவ்விபத்து ஏற்பட்டது.
Mazda CX 5 காரினால் மோதப்பட்ட புரோட்டோன் வீரா கார் சாலையின் எதிரே சென்றதால் ஒரு தம்பதியர் பயணம் செய்த Perodua Axia காரில் மோதியது. அக்காரில் இருந்த அந்த தம்பதியர் காயம் அடைந்தனர். அதே வேளையில் புரோட்டோன் வீரா காரில் முன்புறம் அமர்ந்திருந்த 43 வயது ஆடவர் மாண்டதோடு அதன் ஓட்டுனர் சொற்ப காயத்தோடு உயிர் தப்பியதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Ismail Dollah தெரிவித்தார்.