
கோலாலம்பூர், செப் 18 – மூன்று நாட்களாக காணாமல்போன ஆடவர் ஒருவரின் உடல் மிதந்த நிலையில் கால்வாயில் ஒற்றில் நேற்று காலை மணி 11.30 அளவில் கண்டெடுக்கப்பட்டது. பத்து பஹாட், பாரிட் ராஜா, கம்பூங் பாரிட் லாபிஸ் செம்படானில் முகமட் நஸ்ருல் அசிஸ் என அடையாளம் கூறப்பட்ட 21 வயது இளைஞரின் உடல் அந்த கால்வாயிலிருந்து மீட்கப்பட்டதாக பத்து பஹாட் போலீஸ் தலைவர் இஸ்மாயில் டொல்லா தெரிவித்தார். அவர் இறந்து கிடந்த கால்வாய்க்குள் அவரது மோட்டார் சைக்கிளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக இஸ்மாயில் டொல்லா கூறினார். பாரிட் ராஜாவைச் சேந்த முகமட் நஸ்ருலின் உடலை அவரது குடும்ப உறுப்பினர்கள் அடையாளம் காட்டினர். அவரது கையில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரம் மற்றும் அவரது கை தொலைபேசியும் அவரிடம் காணப்பட்டதாகவும் ஒரு நாளுக்கு முன் அவர் இறந்திருக்கலாம் என இஸ்மாயில் டொல்லா தெரிவித்தார்.