Latestமலேசியா

3 பிள்ளைகள் மதமாற்ற விவகாரத்தில் சட்ட அமைச்சரின் பொறுப்பற்ற போக்கு – வேதமூர்த்தி சாடல்

கோலாலம்பூர், பிப் 19 – மூன்று பிள்ளைகள் மதமாற்ற விவகாரத்தில் அரசியலமைப்பு சட்ட விதிமுறை குறித்து பொறுப்பற்ற முறையில் பேசியிருக்கும் சட்ட அமைச்சர் Wan Junaidi Tuanku Jaafar ரின் போக்கை முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தி சாடினார்.

சமய விவகாரம் மாநிலங்களின் சட்டத்திற்குட்பட்டது என்று கூறிய அவர் ஒருதலைப்பட்சமான மதமாற்ற விவகாரத்தில் பெர்லீஸ் மாநில சட்டம் கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிராக இருக்கிறது என்பது குறித்து அவர் தெளிவாக எடுத்துரைக்கவில்லை என்பதையும் வேதமூர்த்தி சுட்டிக்காட்டினார்.

நாட்டில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டம்தான் உயரிய சட்டம் என்பதை மற்ற எவரையும்விட சட்ட அமைச்சர் அறிந்திருக்க வேண்டும். ஆனால் தமது பிள்ளைகள் ஒருதலைப்பட்டசமாக மதம் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை தனித்து வாழும் தாயான Low Siew Hong நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்படி வான் ஜூனைடி கூறியிருப்பது அர்த்தமற்றதாக இருப்பதாக வேதமூர்த்தி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!