கோலாலம்பூர். பிப் 18 – நவம்பர் மாதத்திலிருந்து சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் சபாக் பெர்னம் மாவட்டத்திலுள்ள 16 பள்ளிகளைச் சேர்ந்த 53 பணியாளர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு முன் மறியலில் ஈடுபட்டனர்.
தங்கள் விவகாரத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு சமபளம் கிடைப்தற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அரசாங்க குத்தகை தொழிலாளர்களுக்கான அமைப்பின் ஆலோசகர் வி.செல்வம் தெரிவித்தார்.
ஏற்கனவே இது குறித்து ஜனவரி 31 ஆம் தேதி சபா பெர்ணம் மாவட்ட கல்வி இலாகாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லையென அவர் கூறினார்.
தொழிலாளர்கள் வாழ்கை செலவீனத்தை சமாளிப்பதற்காக வட்டி முதலைகளிடம் வேறு வழியின்றி கடன் வாங்கியிருப்பதையும் செல்வம் சுட்டிக்காட்டினார். சாப்பாடு வாங்குவதற்குக்கூட பணம் இல்லை. வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலைமையில் பள்ளிகளின் துப்புரவு தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த தொழிலாளர்களின் மாதச் சம்பளம் 1,200 ரிங்கிட் மட்டுமே. ஆனால் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குத்தகையாளர் கடந்த நவம்பர் முதல் சம்பளம் வழங்காமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.