
மலாக்கா , மார்ச் 24 – மலாக்கா, சிலாங்கூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களில் அடுக்குமாடி வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட நால்வர் கொண்ட கும்பல் பிடிப்பட்டனர். 34 முதல் 51 வயதுடைய இரண்டு சந்தேகப் பேர்வழிகள் கோலாலம்பூரிலும் மற்றொரு ஆடவரும் , பெண்ணும் சிலாங்கூரிலும் மு கைது செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார். Klebang கிலுள்ள ஆடம்பர அடுக்குமாடியில் புகுந்து ரொக்கம் மற்றும் 50,000 ரிங்கிட் நகைகளையும் கொள்ளையடித்ததைத் தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து பிடிபட்டதாக Christopher தெரிவித்தார். அவர்களிடமிருந்து விலை உயர்ந்து கைக் கடிகாரங்கள், கைப் பை, கை தொலைபேசிகள் , இரண்டு வாகனங்கள், ஆகியவவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக Christopher தெரிவித்தார்.