Latestமலேசியா

3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது

கோலாலம்பூர், ஜன 26 – அதிகாலை மணி 1 அளவில், சபா, ஜோகூர், பகாங் ஆகிய 3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது.

வெள்ளத்தால் , சபாவும் ஜோகூரும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சபா மாநிலத்தில் 6,309 பேர் துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டதாக Nadma தேசிய பேரிடர் நிர்வாக மையம் தெரிவித்தது.
அதைத் தொடர்ந்து ஜோகூரில் 5, 294 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் .

இவ்வேளையில் பகாங்கில், ரொம்பின் பகுதியில் திறக்கப்பட்ட 3 துயர் துடைப்பு மையங்களில் 97 பேர் அடைக்கலம் பெற்றுள்ளதாக , அம்மையம் குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!