
கோலாலம்பூர், மார்ச் 14 – ஜோகூர், பகாங், மலாக்கா ஆகிய 3 மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள 126 துர் துடைப்பு மையங்களில் இன்னும், 38, 738 பேர் தங்கியுள்ளனர்.
ஜோகூரில் அதிகமாக, 38, 587 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்திருப்பதாக, மாநில வெள்ளப் பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
அம்மாநிலத்தில் Batu Pahat, Muar, Segamat, Tangkak ஆகிய பகுதிகளை வெள்ளம் இன்னும் சூழ்ந்திருக்கிறது.
இவ்வேளையில், பகாங்கில் 127 பேரும், மலாக்காவில் 24 பேரும் வெள்ளப் பாதிப்பினால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.