Latestமலேசியா

3 மாநிலங்களில் 45,000 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம்

கோலாலம்பூர், மார்ச் 11 – ஜோகூர், மலாக்கா, பகாங் ஆகிய 3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 45,489 பேர் இன்னும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

அதில் ஜோகூரில், அதிகமாக இன்று காலை வரையில் 44, 937 பேர் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் பெற்றிருப்பதாக , அம்மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
அம்மாநிலத்தில் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக விளங்கும் பத்து பஹாட்டில் மட்டும் 39, 737 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுள்ளனர்.

மலாக்காவில், ஜாசின் பகுதியில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேர் , அம்மாநிலத்தில் திறக்கப்பட்டிருக்கும் 5 வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் பெற்றுள்ளனர்.

பகாங்கில் , ரொம்பின் பகுதியில் வெள்ளத்தால் இன்னும் 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!