Latestமலேசியா

3 லாரிகளை உட்படுத்திய கோர விபத்து ; 66 வயது ஓட்டுநர் சாமிநோகம் பலி

தாப்பா, மே 5– தெற்கே நோக்கிய பிளாஸ் நெடுஞ்சாலையின் 326 –வது கிலோமீட்டரில், மூன்று லாரிகளை உட்படுத்திய விபத்தில், கொள்கல லாரி ஓட்டுநரான,  66 வயது  எ. சாமிநோகம் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை மணி 6-க்கு நிகழ்ந்த அந்த விபத்தில், பேராக்,  மாதாங்கைச் ( Matang) சேர்ந்த   சாமிநோகம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாக, தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் வன் அசாரூடின் வன் இஸ்மாயில் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது சாமிநோகம் ஓட்டிச் சென்ற கொள்கல லாரி,   இடதுபுறத்தில்  சென்று கொண்டிருந்த சிமென்ட் லாரியை பின் புறமாக மோதியது. அந்த மோதலால் சிமென்ட் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

அதைத் தொடர்ந்து சாமிநோகம் ஓட்டிய லாரி  குடிநீரை ஏற்றியிருந்த மற்றொரு லாரியுடன் மோதி அந்த லாரியை 50 மீட்டர் தூரம்வரை இழுத்துச் சென்றது.
இறுதியாக அவர் ஓட்டிய லாரி சாலை தடுப்பை மோதி எதிர்புற சாலையில் புகுந்ததாக, வன் அசாரூடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!