Latestமலேசியா

3 வயது சிறுவன் கொடூரமாக கொலை

லாஹாட் டத்து, மார்ச் 13 – 2 மரங்களுக்கு இடையில் தலை சிக்கிக் கொண்ட நிலையில், கை – கால்களில் வெட்டுக் காயங்களுடன் 3 வயது சிறுவன் கொடூரமான நிலையில் கொல்லப்பட்ட சம்பவம் சபா, லாஹாட் டத்துவில் நிகழ்ந்தது.

அந்த சிறுவனை சம்பவ இடத்தில் அவரது தாயார் கண்டெடுத்ததாக லாஹாட் டத்து போலீஸ் துணைத் தலைவர் Azmir Abdul Razak தெரிவித்தார்.

ரத்த வெள்ளத்தில் அந்த சிறுவன் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவனது கைகளில் கயிறு கட்டப்பட்டதற்கான தடயம் இருந்ததாக அவர் கூறினார்.

பொது மக்கள் கொடுத்த தகவலை கொண்டு, இச்சம்பவம் தொடர்பில் போலீசார் 30 வயது மதிக்கத்தக்க ஆடவன் ஒருவனைக் கைது செய்தனர்.

அந்த சிறுவனுடன் கடைசியாக இருந்ததாக நம்பப்படும் அந்த ஆடவன், போதைப் பொருள் உட்கொண்டிருந்ததோடு, மன நலம் பாதிக்கப்பட்டவன் என தெரிய வந்திருப்பதாக Azmir Abdul Razak தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!