
கோலாலம்பூர், மார்ச் 13 – அம்னோ இளைஞர் பிரிவின் உதவித் தலைவருக்கான தேர்தலில் ஜோகூர் ஆட்சிக்குழு உறுப்பினரான Hairi Mad Shah வெற்றி பெற்றார். அவர் 3 வாக்குகள் வேறுபாட்டில் Ikmal Hazlan Ikmal Hisham மை வீழ்த்தியதாக அம்னோ தேர்தல் குழுவின் தலைவர் ஷாரிர் சமாட் அறிவித்தார். Hairi க்கு 87 வாக்குகள் கிடைத்தன. Larkin சட்டமன்ற உறுப்பினருமான Hairi யின் வெற்றி இன்று நண்பகல் 12 மணியளவில் இறுதி வாக்குகள் கிடைத்த பின்னர்தான் உறுதிப்படுத்தப்பட்டதாக செய்தியாளர் கூட்டத்தில் ஷாரிர் தெரிவித்தார். அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக டாக்டர் Akmal Shah தேரவு பெற்றார்.