Latestமலேசியா

3 மாதங்களுக்கு குடிநுழைவு முகப்பிட சேவையின் நேரம் நீட்டிக்கப்படும்

கோலாலம்பூர், மே 12 – இரவு மணி பத்து வரையிலான குடிநுழைவு துறையின் முகப்பிடங்களின் சேவை நேர நீட்டிப்பு, மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

நாட்டின் அனைத்துலக எல்லை திறக்கப்பட்டதை அடுத்து, பயண கடப்பிதழை புதுப்பிக்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
அதையடுத்து அந்த முகப்பிட சேவையின் நேர நீட்டிப்பு மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுமென குடிநுழைவு துறையின் தலைமை இயக்குநர் Datuk Khairul Dzaimee Daud தெரிவித்தார்.

புத்ராஜெயா, கோலாலம்பூர், சிலாங்கூர், ஜோகூர், நெகிரி செம்பிலான் , மலாக்கா ஆகிய பகுதிகளில் குடிநுழைவு துறையின் முகப்பிட சேவைகள் இரவு மணி 10 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!