
கோத்தா கினபாலு, ஜன 26 – சபாவின் Karambunai கடல் பகுதியில் காணாமல்போனது முதல் 30 மணிநேரமாக மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவர் இன்று மீட்கப்பட்டார். நேற்று காலை 6 மணி முதல் காணாமல்போனதாக கூறப்பட்ட 69 வயதுடைய Morris Dulin என்ற அந்த மீனவர் காலியாக இருந்த பிளாஸ்டிக் களனில் தொற்றிக்கொண்டு மிதந்துகொண்டிருந்தபோது Sepanggar கடல் பகுதியில் மீட்கப்பட்டார். அரச மலேசிய கடற்படையின் KD Sunda கப்பல் அந்த மீனவரை மீட்டதாக கோத்தா கினபாலு போலீஸ் தலைவர் Mohd Zaidi Abdullah உறுதிப்படுத்தினார்.