கோலாலம்பூர், பிப் 7- கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, கடந்தாண்டு தொடங்கி கிட்டதட்ட 30,000 முதலாளிகள் வெளிநாட்டுப் வீட்டுப்பணிப்பெண்களைத் தருவிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்தோனேசியப் பணிப்பெண்களை தருவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவது ஒத்திவைக்கப்பட்டால் , அந்த நிலை இன்னும் மோசமாகலாம் என PAPA எனப்படும் மலேசிய வேலைவாய்ப்பு சங்கத்தின் தலைவர் Datuk Foo Yong Hooi தெரிவித்தார்.
தேசிய மீட்சித் திட்டத்தின் கீழ் தற்போது மக்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே கற்றல் கற்பித்தலில் ஈடுபடும் பிள்ளைகளையும் வயது முதிர்ந்த பெற்றோரையும் கண்காணிப்பதில் பல குடும்பங்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.