
சபா, நவ 21 – வாகனம் ஓட்டும் லைசென்ஸ் பெற முறையான வழிமுறைகளை பின்பற்றாமல் குறுக்கு வழியில் லைசென்ஸுகளைப் வழங்க 3 லட்சம் ரிங்கிட் வரை லஞ்சம் பெற்ற 4 அமலாக்க அதிகாரிகளை சபா ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
இடைத்தரகர்கள் மற்றும் லைசென்ஸ் பெறவுள்ளவர்களிடமிருந்து அந்த லஞ்ச பணத்தை கடந்த 2021லிருந்து 2022 வரை பெற்றுள்ளது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 30 வயது மதிக்கத்தக்க அந்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக சபா ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் டத்தோ கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர்கள் இன்று முதல் நவம்பர் 28ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைக்க மேஜிஸ்ட்ரேட் வான் பாராஃ (Majistret Wan Farrah) உத்தரவிட்டுள்ளார். இடைத்தரகர்கள் மூலம் ஒவ்வொருவரிடமிருந்து லெசென்ஸுகளை வழங்க 400 ரிங்கிட் முதல் 1200 ரிங்கிட் வரை அவர்கள் பெற்றுள்ளதையும் தாங்கள் விசாரணையில் கண்டுபிடித்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டார்.
இதனிடையே இச்செயலால், அரசாங்கத்திற்கு கிட்டதட்ட 1.5 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது கணக்கிடப்பட்டுள்ளது.