கோலாப் பிலா, பிப் 16 – பல்வேறு முத்திரைகளைக் கொண்ட வைய்ன்கள் வைத்திருந்ததாக இருவர் மீது கோலாப் பிலா செஷன்ஸ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. போலீசின் அனுமதியின்றி 3,493 ரிங்கிட் மதிப்புள்ள 1,248 வைன் டின்களை வைத்திருந்ததாக 65 வயதுடைய P. Appanayara மற்றும் 36 வயதுடைய A . Karthik ஆகியோர் மீது நீதிபதி Norma Ismail மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம்தேதி கோலாப் பிலா, Taman Sri Glugor ரில் உள்ள வீட்டில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்தாக கூறப்பட்டது. அதோடு அந்த மதுபானங்களுக்கு 13,011 ரிங்கிட் கலால் வரி செலுத்தத் தவறியதாகவும் அவ்விருவர் மீதும் இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
அப்பநாயரா மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர். அவ்விருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.