Latestஉலகம்

இரண்டு கோடியே 76 லட்சம் ரிங்கிட் மதிப்புடைய தங்க கழிவறை தொட்டி திருட்டு; நால்வருக்கு எதிராக குற்றச்சாட்டு

லண்டன், நவம்பர் 7 -18 காரட் தங்க கழிவறை தொட்டியை திருடியதாக, நான்கு ஆடவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் “அமெரிக்கா” என அழைக்கப்படும் அந்த தங்க கழிவறை தொட்டியின் விலை 48 லட்சம் பவுண்ஸ் ஸ்டெர்லிங் அல்லது இரண்டு கோடியே 76 லட்சம் ரிங்கிட் ஆகும்.

ஒக்ஸ்பெட்டுக்கு (Oxford) அருகிலுள்ள, பிளென்ஹெய்ம் (Blenheim) அரண்மனையிலிருந்து அது களவாடப்பட்டதாக கூறப்படுகிறது.

18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த வரலாற்றுப்பூர்வ அரண்மனையை, ஐநாவின் UNESCO அமைப்பு, உலக பாரம்பரிய தளமாகவும் பிரகனடப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வரலாற்று சிறப்பு மிகுந்த அரண்மனையில் இருந்த தங்க கழிவறைத் தொட்டியை கொள்ளையிட்ட, 35 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்ட நால்வருக்கு எதிராக, இம்மாதம் 28-ஆம் தேதி குற்றம்சாட்டப்படவுள்ளது.

அந்த கழிவறை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த காலத்தில், ஒருவர் மூன்று நிமிடம் மட்டுமே அதனை பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக, நியூயார்க்கில் அது காட்சிக்கு வைக்கப்பட்ட ஓராண்டு காலத்தில், அதனை சுமார் ஒரு லட்சம் பேர் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!