
கூச்சிங் , மார்ச் 10 – 35 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருளை Sarawak போலீசார் பறிமுதல் செய்தனர்.
கூச்சிங், Jalan Stutong Baru விலுள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக sarawak போலீஸ் ஆணையாளர் டத்தோ Mohd Azman Ahmad Sapri தெரிவித்திருக்கிறார்.
22. 676 கிலோ எடையுள்ள ஷாபு போதைப் பொருள் 12 பொட்டலங்களில் இருந்ததை அவ்வீட்டில் நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். இது தொடர்பாக 37 வயது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டிருப்பதை Mohd Azman உறுதிப்படுத்தினார்.