கோலாலம்பூர், மே 9 – மொத்தம் 38 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட Forex எனப்படும் வெளிநாட்டு பணம் முதலீடு தொடர்பில் பொய்யான தகவலை சமர்ப்பித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் சட்ட நிறுவன உரிமையாளர் ஆகியோரை MACC கைது செய்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க அந்த இருவரும் முதலீட்டு திட்டங்கள், காப்புறுதி பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் பொய்யான தகவலை வழங்கியதாக MACC க்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை மணி 5 அளவில் பினாங்கு Seberang Prai யிலுள்ள Macc தலைமையகம் மற்றும் அலுவலகத்திற்கு வந்து வாக்குமூலம் வழங்கியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் புத்ரா ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டு இரண்டு நாட்கள் அவர்களை தடுத்து வைக்கும் உத்தரவை MACC பெற்றது. . இதனை MACC விசாரணை பிரிவின் மூத்த இயக்குனர் Hishamuddin Hashim உறுதிப்படுத்தியதோடு 2009 ஆம் ஆண்டு Macc சட்டத்தின் 18 ஆவது பிரிவின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.