Latestமலேசியா

4ஆவது மாடியிலிந்து 11 வயது சிறுவன் கீழே விழுந்து மரணம்

சுங்கை பூலோ, மார்ச் 4 – சிலாங்கூர் Puncak Alam மிலுள்ள அடுக்ககத்தின் 4ஆவது மாடியிலிருந்து 11 வயது சிறுவன் கீழே விழுந்து மரணம் அடைந்தான் என Sungai Buloh மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Shafaaton Abu Bakar தெரிவித்தார். அதிகாலை 2 மணியளவில் குளியல் அறைக்கு சென்றபோது தனது மகனின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்ததை அச்சிறுவனின் தந்தை பார்த்ததாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. எனினும் அந்த சிறுவன் அங்கு தூங்கிக்கொண்டிருக்கிறானா என்பதை அவர் கவனிக்கவில்லை. காலை 8 மணியளவில் சிற்றுண்டி வாங்கிக்கொண்டு திருப்பியபோதுதான் அடுக்கு மாடி வீட்டின் கீழே தமது மகன் இறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார் என Superintendan Shafaaton கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!