
கோலாலம்பூர், ஜன 27 – மலேசியாவுக்கு வந்த Lithuania பெண் ஒருவர் தமது பெற்றோருடனான தொடர்பை இழந்த நான்கு ஆண்டுகளுக்கு பின் மலேசியாவில் பாதுகாப்புடன் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக Lithuania பொது ஒலிபரப்பு அறிவித்தது. மத்திய Lithuania சேர்ந்த அந்த பெண் 19 வயதில் தமது இணைய நண்பரை காண்பதற்காக 2019ஆம் ஆண்டு ஜனவரியில் மலேசியா வந்துள்ளார்.
பெற்றோருடனான தொடர்பை இழந்ததைத் தொடர்ந்து அவரை தேடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மலேசியாவிலுள்ள Lithuania சமூகத்தின் முகநூல் மூலமாக அந்த பெண் மலேசியாவில் இருப்பதை லித்துவானிய விசாரணையாளர்கள் கண்டுபிடித்தனர். கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம்தேதி அந்த பெண் வீடியோ மூலமாக Lithuania விசாரணையாளர் Vytautas Globis சுடன் தொடர்புகொண்டு தாம் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.