கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – கோலாலம்பூர், ஜாலான் ராஜா சூலானில் (Jalan Raja Chulan) உள்ள நான்கு கரோவோகே (karaoke) மையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சேதனையில், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படும் 107 சீன நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அவர்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புகார்களைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களாக குடிநுழைத் துறை நோட்டமிட்டு கையும் களவுமாகப் பிடித்துள்ளது.
21 மாடி கொண்ட ஒரு அலுவலகக் கட்டிடத்திற்கு பின் மறைவாக நடத்தப்பட்டு வந்த அந்த மையங்களின், அறையின் அளவு மற்றும் பிற சேவைகளைப் பொறுத்து, முன்பதிவுக் கட்டணமாக 4,500 ரிங்கிட் முதல் 30,000 ரிங்கிட் வரை வசூலிக்கப்படுகிறது.
குடிநுழைவு சட்டத்தின் கீழ், 5 மாதங்களாகச் செயல்பட்டு வரும் அந்த மையங்களில், 20 வயது முதல் 60 வயது வரையிலான 213 பேர் பல்வேறு குற்றங்களில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.