ஜோகூர் பாரு, பிப் 22 – அடுத்த மாதம் நடைபெறும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் 4 பாரம்பரிய தொகுதிகளில் போட்டியிடும் நிலைப்பாட்டில் ம.இ.கா உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
ஜோகூர் தேசிய முன்னணியின் தலைவரும் மாநில மந்திரிபுசாருமான டத்தோ Hasmi Mohammad ட்டுடன் நாளை நடைபெறும் சந்திப்பின்போது மஇ.கா இதனை வலியுறுத்தும் என அவர் கூறினார்.
தொகுதி பங்கீட்டில் தீர்வொன்றை காணும் வகையில் அந்த சந்திப்பு இருக்கும் . இதற்கு முன் ம.இ.கா போட்டியிட்ட 4 தொகுதிகளில் போட்டியிடுவது என்ற முடிவு தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என கட்சித் தலைவர் எங்களிடம் கூறியுள்ளார்.
அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை தேசிய முன்னணி அமல்படுத்தி வருவதால் கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி சிறந்த முடிவை எடுக்கும் என நாம் நம்புவோம் என இன்று ஜோகூர்பாருவில் தெக்குன் தொழில் முனைவர் சொக்சோ சந்தா செலுத்தும் நிகழ்வை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.