Latestமலேசியா

மலேசியா இலக்கவியல் வருகை அட்டை வெளிநாட்டு வருகையாளர்களுக்கு கட்டாயம்; 3 நாட்களுக்கு முன்பே சமர்ப்பிக்க வேண்டும்

கோலாலம்பூர், டிச 3 – நாட்டிற்குள் நுழைய விரும்பும் வெளிநாட்டினர் டிசம்பர் 1 முதல் MDAC எனப்படும் மலேசிய இலக்கவியல் வருகை அட்டையை பூர்த்திசெய்ய வேண்டும் என்று குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. மலேசியாவிற்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக MDAC மலேசிய இலக்கவியல் வருகை அட்டை சமர்ப்பிக்கப்பட வேண்டும். விசா விலக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பயணிகளுக்கும் இது பொருந்தும் என குடிநுழைவுத்துறையின் முகநூலில் பதிவேற்றம் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவிற்குப் பயணிகள் தாங்கள் வந்த தேதி, புறப்படும் தேதி, விமானம், தரை அல்லது கப்பல் ஏறும் கடைசித் துறைமுகம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். நாட்டிற்குள் நுழையும் போது கடமையில் இருக்கும் குடிநுழைவுத் துறை அதிகாரியிடம் வருகையாளர்கள் தங்கள் கடப்பிதழ் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட MDAC இரண்டையும் காட்ட வேண்டும்.

குடியேற்ற அனுமதி பெறாமல் சிங்கப்பூர் வழியாகச் செல்பவர்கள் அல்லது பயண இடமாற்றம் செய்பவர்கள், மலேசிய நிரந்தர குடியிருப்பாளர்கள், மற்றும் மலேசியன் ஆட்டோமேட்டட் கிளியரன்ஸ் சிஸ்டம் (MACS) வைத்திருப்பவர்கள் மலேசிய இலக்கவியல் வருகை அட்டையை சமர்ப்பிக்கத் தேவையில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!