Latestமலேசியா

4 நாடுகளுக்கான தாம் மேற்கொண்ட அலுவல் பயணங்களுக்கு தனியார் நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தவில்லை – அன்வார் மீண்டும் வலியுறுத்து

கோலாலம்பூர், நவ 25 – நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கி எகிப்து, சவுதி அரேபியா பெரு மற்றும் பிரேசில் ஆகிய நான்கு நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட அலுவல் பயணங்களுக்கு தனியார் நிறுவனத்தின் நிதியை பயன்படுத்தவில்லை என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார்.

தமது பேராளர் குழுவின் விமான பயண செலவுகளுக்காக 1.6 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் செலவு செய்திருப்பதாக அவர் விளக்கம் அளித்தார். நான் தனியார் நிறுவனங்களின் நிதியை பயன்படுத்துவது கிடையாது.

நான்கு நாடுகளுக்கு தாம் மேற்கொண்ட வருகைக்காக அரசாங்கம் மலேசிய ஏர்லைன்டஸ் விமானத்தை பயன்படுத்தியது. இதற்கான செலவு 1.6 மில்லியன் ரிங்கிட்டாகும். இது முழுக்க முழுக்க அரசாங்க பணம் ஆகும் என அன்வார் கூறினார்.

இதர இருக்கைககள் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. முதலீடு மற்றும் கூட்டுத் தொழில் திட்டங்களை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு இந்த இருக்கைகள் வழங்கப்பட்டதாக இன்று தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் அன்வார் தெரிவித்தார்.

இதற்காக தனியார் நிறுவனம் ஒவ்வொன்றும் 4.5 மில்லியன் ரிங்கிட் வழங்கியதாகவும் அவர் கூறினார். அதே வேளையில் அரச ஆடம்பர ஜெட் விமானத்தை பயன்படுத்தியிருந்தால் இந்த நான்கு நாட்டிற்கும் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவாகியிருக்கும். எனினும் பங்காளித்துவத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 1.6 மில்லியன் ரிங்கிட் மட்டுமே செலவானதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!