4 மாநிலங்களின் அரசாங்கத்திற்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது – டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், மார்ச் 30 – இதற்கு முந்தைய அரசாங்கத்தைவிட ஒற்றுமை அரசாங்கம் Kelantan. Kedah, Terengganu மற்றும் Perlis ஆகிய அரசாங்கங்களுக்கு கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மேலவையில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் நிர்வாகத்திலுள்ள மாநிலங்களை தமது அரசாங்கம் புறக்கணித்துள்ளதாக வெளியான தகவலை அன்வார் மறுத்தார். இதுபோன்ற அவதூறுகள் நிறுத்தப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார், தங்களை ஆதரிக்காத மாநிலங்களை ஒற்றுமை அரசாங்கம் ஓரங்கட்டுவதாக தொடர்ந்து வெளியாகி வரும் குற்றச்சாட்டு உண்மையல்ல என அன்வார் தெரிவித்தார். இவ்வாண்டு பெர்லீஸ் 154 மில்லியன் ரிங்கிட்டும், திரெங்கானு 400.1 மில்லியன் ரிங்கிட்டும், Kelantan 351.5 மில்லியன் ரிங்கிட்டும் Kedah 512.1 மில்லியன் ரிங்கிட்டும் பெற்றுள்ளதாக அன்வார் விவரித்தார்.