Latestமலேசியா

4 வருடங்களாக வாடகை செலுத்தவில்லை; வீட்டை அலங்கோலமாக்கி சென்ற வாடகைக்காரன்

கோலாலம்பூர், பிப் 3 – வீட்டை வாடகைக்கு எடுத்த மிக மோசமான நபரால் , 50,000 ரிங்கிட் வரை இழப்பை எதிர்நோக்கியிருக்கிறார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.

அந்த நபர் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைப் பணத்தை செலுத்தாததோடு, வீட்டு நீர் – மின்சாரக் கட்டணத்தையும் செலுத்தாமல், துர்நாற்றம் வீசும் அளவிற்கு வீட்டில் குப்பைகளை குவித்து அலங்கோலமாக்கி சென்றிருப்பதாக, அந்த வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார் .

தமது தந்தையின் மறைவுக்குப் பின்னரே, வீடு வாடகைக்கு விடப்பட்ட விபரம் தமக்கு தெரிய வந்ததாக Jejai என்பவர் தெரிவித்தார்.

வீட்டை காலி செய்யும்படி, குடும்பத்துடன் வாடகைக்கு தங்கியிருந்த அந்த நபரை கேட்டுக் கொண்டபோது , அந்த நபர் மோசமான வார்த்தைகளால் திட்டியதோடு வெளியேற மறுத்ததாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!