கோலாலம்பூர், மே 10 – Pontianனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4.32 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் 75 வயது பெண்மணி உட்பட நான்கு தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதிகாலை 1.30 மணிக்கும் நண்பகல் 12 மணிக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது 40 முதல் 59 வயதுடைய மூன்று உள்நாட்டு ஆடவர்களும் உள்நாட்டைச் சேர்ந்த பெண்மணியும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் M. Kumar தெரிவித்தார்.
சந்தேக நபர்களில் ஒருவனின் மூத்த சகோதரி அந்த பெண்மணி என தெரியவந்ததாக இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குமார் கூறினார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் தீவிரமாக செயல்பட்டுவந்த அந்த கும்பல் நீர் மேல் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்ததோடு அந்த வீட்டை போதைப் பொருள் பதனிடுவது மற்றும் பொதைப் பொருளை பொட்டலமிடுவதற்கும் பயன்படுத்தி வந்ததாக அவர் கூறினார். அந்த வீட்டில் 25.5kg ekstasi பவுடர் , 970 பரவச போதை மாத்திரைகள் , கஞ்சா உட்பட பல்வேறு போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக குமார் தெரிவித்தார்.