Latestஉலகம்விளையாட்டு

40 ஆயிரம் பேர் அமரக்கூடிய “நகரும்” அரங்கம்; கத்தார் வடிவமைத்தது

கத்தார், நவ 17 – 2022 உலக கிண்ண காற்பந்தாட்டம் தொடங்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை முன்னிட்டு வரலாற்றில் முதல் முறையாக, “நகரும்” அரங்கை கத்தார் வடிவமைத்துள்ளது.

40 ஆயிரம் பேர் அமரக்கூடிய வசதியை உள்ளடக்கியுள்ள அந்த அரங்குக்கு Stadium 974 என பெயரிடப்பட்டுள்ளது. கத்தாரின் அனைத்துலக குறியீட்டு எண் மற்றும் சம்பந்தப்பட்ட அரங்கை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு அதற்கு Stadium 974 என பெயரிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக, உலக கிண்ண காற்பந்தாட்டம் அந்த “நகரும்” அரங்கில் நடைபெறவுள்ளது. கத்தார் தலைநகர் Doha-விலுள்ள, Ra’s Abu Aboud எனுமிடத்தில் தற்சமயம் அந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 40 ஆயிரம் பேர் அமர்ந்து காற்பந்தாட்டத்தை கண்டு களிக்கும் வசதியுடன், கழிவறை, மாடிப்படிகள் உட்பட பல்வேறு வசதிகளும் அந்த அரங்கில் உள்ளடங்கியுள்ளது.

நவம்பர் 22-ஆம் தேதி, மெக்சிகோவுக்கும், போலந்துக்கும் இடையிலான காற்பந்தாட்டம் Stadium 974 அரங்கில் நடைபெறும். அதனை தொடர்ந்து, 24-ஆம் தேதி, போர்த்துகல் v கானா, 26-ஆம் தேதி, பிரான்ஸ் v டென்மார்க், 28-ஆம் தேதி பிரேசில் v சுவிட்சிலாந்து இடையிலான ஆட்டங்களும் நடைபெறும்.

கடற்கரைக்குக்கும், Hamad அனைத்துலக விமான நிலையத்திற்கும் மிக அருகில் அமைக்கப்பட்டுள்ளதால், அரங்கில் அமர்ந்தவாறு உலக கிண்ணத்திற்காக வந்திறங்கும் காட்சிகளையும் இரசிகர்களால் எளிதாக கண்டு களிக்க முடியும். கத்தாரில் உலக கிண்ண காற்பந்தாட்டம் நிறைவடைந்தவுடன், Stadium 974 அரங்கம் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, அடுத்து காற்பந்தாட்டம் நடைபெறவுள்ள நாட்டிற்கு கொண்டு செல்லப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!