400 மீட்டர் ஓட்டத்தில் 3ஆவது முறையாக தேசிய சாதனையை ஷேரின் முறியடித்தார்.

400 மீட்டர் ஓட்டத்தில்
3ஆவது முறையாக
தேசிய சாதனையை
ஷேரின் முறியடித்தார்.
கோலாலம்பூர், பிப் 5 – அமெரிக்காவை தளமாகக் கொண்டு பயிற்சி பெற்றுவரும் தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனையான ஷேரின் வெலபாய் (Shereen Samson Vallabouy ) 400 மீட்டர் ஓட்டத்தில் ஒரு ஆண்டிற்குள் தாம் ஏற்படுத்தியிருந்த சாதனை நேரத்தை மூன்றாவது முறையாக முறியடித்துள்ளார். அமெரிக்காவில் சிக்காகோ அனைத்துலக லெவிஸ் ஓட்டப்பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட ஷேரின் வெள்ளிக்கிழமையன்று 400 மீட்டர் ஓட்டத்தை 52.87 வினாடியில் ஓடி முடித்து சாதனையை ஏற்படுத்தினார். கடந்த ஆண்டு Minnesotaவில் Bearson Gathje Classics ஓட்டப்பந்தயப் போட்டியில் அவர் 52.87 வினாடியில் 400 மீட்டர் ஓட்டத்தை ஓடி முடித்தார். இதன்வழி 400 மீட்டர் ஓட்டத்தை 54 வினாடிக்குள் ஓடி முடித்த மலேசிய வீராங்களை என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
அமெரிக்காவில் Minesoto விலுள்ள winona State பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் ஷேரின் மலேசியாவின் முன்னணி ஓட்டப்பந்த போட்டியாளர்களான சம்சோன் வெலபாய் – ஜோசப்பின் மேரி தம்பதியரின் புதல்வியாவார். மலேசியாவின் Noraseela Mohd Khalid ஏற்படுத்தியிருந்த 16 ஆண்டு கால சாதனை நேரமான 53.79 வினாடியை அவர் முறியடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற லெவிஸ் அனைத்துலக மூடரங்கு ஓட்டப்பந்தயப் போட்டியில் நால்வர் கலந்துகொண்ட 400 மீட்டர் அஞ்சல் ஓட்டத்திலும் ஷேரின் மற்றும் அவரது பல்கலைக்கழக ஓட்டப்பந்தயக் குழுவினர் தங்கப் பதக்கத்தை வென்றனர்.