Latestமலேசியா

4,000த்திற்கும் மேற்பட்ட சுகாதார ஒப்பந்த அதிகாரிகளுக்கு நிரந்தர பதவிகள் கைரி தகவல்

கோலாலம்பூர், ஆக 17 – நிரந்தர பதவிகளுக்காக இவ்வாண்டு விண்ணப்பம் செய்திருந்த 8,072 ஒப்பந்தகால மருத்துவர்கள், பல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருந்தக பணியாளர்களில் 4,053 பேரின் விண்ணப்பங்களை சுகாதார அமைச்சு அங்கீகரித்துள்ளது. அவர்களில் 3,215 மருத்துவர்கள், 438 பல் மருத்துவர்கள், 400 மருந்தக பணியாளர்களும் அடங்குவர் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்திருக்கிறார். தயார் நிலை பட்டியலில் இதர 225 பேர் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒப்பந்தகால மருத்துவ பணியாளர்களுக்காக நிரந்தர பதவிக்கான கொள்கையில் இவ்வாண்டு கூடுதலான நிரந்தர பதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதனை அடுத்து இனி ஆண்டுதோறும் 1,500 நிரந்தர பதவிகளுக்கான வேலை வாய்ப்பு ஏற்படும் என்றும அவர் விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!