புது டில்லி, பிப் 21 – தனது வயிற்றுப் பகுதியில் பெரிதாகியிருந்த கட்டியை அகற்றிய பின்னர், இந்தியாவைச் சேர்ந்த பெண்மணியின் உடல் எடை பாதியாக குறைந்திருக்கிறது.
அந்த பெண்மணியின் உடலில் வளர்ந்திருந்த 47 கிலோகிராம் எடை கொண்ட பெரிய கட்டி அகற்றப்பட்ட பின்னர் , தற்போது அந்த பெண்ணின் உடல் எடை 49 கிலோகிராமாக உள்ளது.
இதற்கு முன்னர், அந்த பெரிய கட்டியினால் எழுந்து நடமாட முடியாமல் இருந்த அந்த பெண் தற்போது பெரும் பாரத்தை இறக்கி வைத்திருப்பது போன்ற உணர்வை பெற்றுள்ளார்.
இவ்வேளையில் அப்பெண்ணுக்கு ஏற்பட்ட கட்டி, அபூர்வமாக ஒருவருக்கு ஏற்படக் கூடியது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.