
இரண்டு கோடி ரிங்கிட் மானியத் தொகையை பெற்றுக் கொண்ட போதிலும், இதுவரை அதற்கான திரைப்படங்களை ஒப்படைக்காத 47 தனிநபர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராக, FINAS – தேசிய திரைப்பட வாரியம் வழக்கு தொடுத்துள்ளது.
2013-ஆம் ஆண்டு தொடங்கி 2017-ஆம் ஆண்டு வரையில் வழங்கப்பட்ட மானியத் தொகை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நடவடிக்கை அடிப்படையில் அந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, FINAS தலைமை அதிகாரி முஹமட் நாசிர் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த சட்ட நடவடிக்கையை தவிர்க்க முயலும் தரப்பினர் திவாலானவர்களாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் முஹமட் நாசிர் சொன்னார்.
மானியத் தொகையை திரும்ப செலுத்த கோரி அனுபப்பட்ட எச்சரிக்கை கடித்ததை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிராகரித்ததோடு, அவர்களில் சிலர் FINAS மனிதாபிமானமற்ற நிலையில் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டியிருந்ததையும் முஹமட் நாசிர் சுட்டிக் காட்டினார்
அதனால், இவ்வாண்டு தொடங்கி மானியத்தை பகிர்ந்தளிக்கும் நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.