
திருவனந்தப்புரம்,மார்ச் 15 – 47 வயதில் எனது அம்மா மீண்டும் கர்ப்பமாகியதால் நான் ஏன் அவமானப் பட வேண்டும் ? எனக்கொரு தங்கை கிடைக்கப்போகிறது என தான் மகிழ்ச்சியே அடைந்திருப்பதாகக் கூறியிருக்கிறார் 23 வயதான பெண்.
கேரளாவைச் சேர்ந்த அப்பெண்ணின் உருக்கமான பதிவு, சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டு பலரது கவனத்தை பெற்றிருக்கின்றது.
அம்மா மீண்டும் கர்ப்பமாகியிருப்பதாக அப்பா தனக்கு தகவல் தெரிவித்த போது, அம்மா 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்ததாக அப்பெண் கூறியுள்ளார்.
7 மாதங்கள் வரை தான் கர்ப்பமடைந்திருப்பதாக தனது அம்மா உணரவே இல்லையெனவும், அவர் menopause –மாதவிடாய் நிற்பதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதால், தனது வயறு பெரிதாகியிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்ததாக அப்பெண் குறிப்பிட்டிருந்தார்.
எப்போதும் எனக்கு ஒரு உடன்பிறப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணியிருந்தேன். இன்று தனது அந்த நீண்ட கால ஆசை நிறைவேறியிருப்பதாக , குடும்பத்துக்கு ஒரே பிள்ளையான அந்த இளம் பெண் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றார்.