
ஷா ஆலாம் , டிச 27 – Sungai Semenyih , Bukit Tampoi நீர் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுவது நிறுத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட 472 பகுதிகளுக்கும், நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெட்டாலிங், ஹுலு லாங்காட் , செப்பாங், புத்ராஜெயா, குவாலா லங்காட் ஆகிய பகுதிகளுக்கு நேற்றிரவு மணி 12 -க்கு நீர் விநியோகம் திரும்பியதாக, Air Selangor நிறுவனம் தெரிவித்தது. முன்னதாக, 1,000 லிட்டர் வாசனை திரவியம் கொட்டி, Semenyih ஆற்றில் நீர் தூய்மைக் கேடு ஏற்பட்டு, இரு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.