Latestமலேசியா

ஜோகூரில், வெளிநாட்டவரின் கார் மோதித் தள்ளியது; மோட்டார் சைக்கிளோட்டியும், பயணியும் சாலையில் தூக்கியெறியப்பட்டனர்

பத்து பஹாட், பிப்ரவரி 13 – ஜொகூர், யோங் பெங்கிற்கு அருகே, வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில், திடீரென அவசரப் பாதையில் நுழைந்த வெளிநாட்டவர் ஓட்டிச் சென்ற காரை மோதியதன் விளைவாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவரும், அவரது பின்னால் அமர்ந்து சென்றவரும், சாலையில் தூக்கியெறிப்பட்டனர்.

அச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை மணி 5.20 வாக்கில், சம்பந்தப்பட்ட 52 வயது காரோட்டி யொங் பெங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த வேளை ; மோட்டார் சைக்கிளோட்டி இன்னும் புகார் செய்யவில்லை என்பதை, பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டொல்லா உறுதிப்படுத்தினார்.

கடந்த ஒரு வாரக் காலத்தில், நெடுஞ்சாலை அவசரப் பாதையை பயன்படுத்திய வெளிநாட்டு ஓட்டுனரை உட்படுத்திய இரண்டாவது விபத்து அதுவாகும்.

கடந்த சனிக்கிழமை, 40 வயது வெளிநாட்டவர் ஒருவர், நெடுஞ்சாலை அவசரப் பாதையை பயன்படுத்துவதை கண்டித்த உள்நாட்டு ஓட்டுனர் ஒருவர் தடியால் தாக்கப்பட்டார்.

எனினும், தடியால் தாக்கிய நபர் பின்னர் கெந்திங் மலையில் கைதுச் செய்யப்பட்டு நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!