
கோலாலம்பூர், மார்ச் 16 – 48 மணி நேரத்திற்குள்ளேயே, குறுகிய நேரத்தில் டெலிமூவி ஒன்றைத் தயாரித்து வெளியிட்டு சாதனை படைத்திருக்கின்றது Filmstars Tamilan Production உள்நாட்டு நிறுவனம்.
30-கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்திருக்கும் அய்யனார் குடும்பம் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த டெலிமூவியை , அந்நிறுவனத்தின் இயக்குநர் சரவணன் இயக்கியுள்ளார்.
கடந்த மார்ச் 4-ஆம் தேதி கலை மணி 9-க்கு இந்த டெலிமுவிக்கான படப்படிப்பு தொடங்கி, படத்துக்கான எடிட்டிங் பணிகள் முடிந்து மறுநாள் மாலை மணி 7. 30க்கு Finas -மலேசிய திரைப்பட மேம்பாட்டு வாரியத்திடம் , டெலிமுவி திரையிட்டு காண்பிக்கப்பட்டதாக, Filmstars Tamilan Production பொறுப்பாளர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
இந்த 50 நிமிட ‘அய்யனார் குடும்பம்’ டெலிமூவி மார்ச் 23-ஆம் தேதி, இந்நிறுவனத்தின் Film Star Malaysian யூடியூப் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதனிடையே, 48 மணி நேரத்தற்குள்ளேயே டெலிமுவியைத் தயாரித்து வெளியிட்ட தங்களின் முயற்சியை மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.