
நியு யோர்க், டிச 30 – இவ்வாண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின்னர், சில பழைய iPhone, Android வகை விவேக கைபேசிகளில் வட்சாப் செயலி இயங்காமல் போகும். பயனர்கள், குறிப்பிட்ட அந்த கைபேசிகளை மாற்ற வேண்டும் அல்லது அதன் இயக்கும் மென்பொருளை மேம்படுத்த வேண்டுமென, வட்சாப் நிறுவனம் கூறியுள்ளது. வட்சாப் இயங்காமல் போகக் கூடிய iPhone, LG , Samsung , Sony , முதலிய வகைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 49 பழைய கைபேசி மாடல்களில் விபரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.